நடிகர் அஜித்துக்கு சொந்தமாக சென்னையில் உள்ள பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா!!
அடேங்கப்பா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருபவர் அஜித்.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த குட் பேட் அக்லி மாபெரும் அளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனால் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து பயணிக்க அஜித் முடிவு செய்துள்ளார்.
விரைவில் AK 64 படத்தின் அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது. நடிகர் அஜித்துக்கு சொந்தமாக சென்னை திருவான்மியூரில் வீடு ஒன்று உள்ளது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.
இந்த நிலையில், பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித் வீட்டின் மதிப்பு ரூ. 35 முதல் ரூ. 40 கோடியாகும் என கூறப்படுகிறது.