இந்த தாலியை நான் இனி கழற்றவே மாட்டேன்... ரோபோ ஷங்கர் மனைவி
சிறந்த காமெடி நடிகராக சின்னத்திரையில் கலக்கி அதன்மூலம் வாய்ப்புகள் பெற்று வெள்ளித்திரைக்கு வந்தவர் ரோபோ ஷங்கர்.
அஜித், தனுஷ், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்து பெரிய வளர்ச்சி பெற்றவருக்கு சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை மோசமானது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் சினிமா பக்கம் வராமல் சிகிச்சை பெற்று வந்தார். பின் கொஞ்சம் உடல்நிலை சரியானதும் நடிக்க துவங்கியவருக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.
கடந்த செப்டம்பர் 18 தேதி உயிரிழந்தார். தற்போது ரோபோ ஷங்கரின் மனைவி தாலியாக ரோபோ ஷங்கர் வாங்கிய கலைமாமணி விருதின் செயினை அணிந்துள்ளாராம். இனி அதை கழற்றவே மாட்டேன், இனி தான் எனது தாலி என அணிந்துள்ளாராம்.