விஜய் டிவியில் இருந்து விலகி, ஜீ தமிழுக்கு சென்ற மணிமேகலை..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நடன நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் (DJD ). இதனுடைய மூன்றாவது சீசன் துவங்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக சினேகா, பாபா பாஸ்கர் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளனர். வழக்கமாக இந்த நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய் மட்டுமே தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், தற்போது புதிதாக மணிமேகலையும் அவருடன் இணைந்துள்ளார்.
ஆம், சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவரான மணிமேகலை தற்போது விஜய் டீவியிலிருந்து விலகி, ஜீ தமிழில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட சில விஷயங்கள் காரணமாக அவர் அதிலிருந்து வெளியேறினார். அதன்பின் அவர் வெளியிட்ட வீடியோ படுவைரலானது. இதற்கு காரணம் ப்ரியங்கா தான் என கூறினார்கள்.
நாளடைவில் இந்த சர்ச்சை அப்படியே அமைதியான நிலையில், மணிமேகலை தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 3ல் தொகுப்பாளினியாக வந்துள்ளார். இந்த நிலையில், வருகிற மார்ச் 1 முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பம் ஆகிறது.
அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ..