நடிகருடன் நெருக்கம்.. பொது இடத்தில் உடையை கழட்டி.. ஓட விட்ட காதலன்.. அசின் விழ்ந்த காரணம் இது தான்..!
நடிகை அசின் தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணும் அளவிலான திரைப்படங்களிலே நடித்திருந்தாலும், முன்னணி நடிகைகளுக்கு இணையான செல்வாக்கை பெற்றிருந்தார்.
குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், கமல்ஹாசன், சல்மான் கான், அக்ஷய் குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமை அசினுக்கு உண்டு.
அப்படி உச்சத்தில் இருந்த அசினின் திரை வாழ்க்கை திடீரென சரிந்ததற்கான காரணத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அசின் பாலிவுட் சென்றபோது, பாலிவுட் நடிகர் நித்தின் முகேஷை காதலித்தார்.
ஆனால், அந்த உறவை ரகசியமாக வைத்துக்கொள்ள நித்தின் முகேஷ் நிபந்தனை விதித்தாராம். இருப்பினும், அசின் சல்மான் கானுடன் நெருக்கமாக நடித்ததால் நித்தின் முகேஷ் கோபம் அடைந்தார்.
மேலும், படப்பிடிப்பு ஒன்றில் பொது இடத்திலேயே உடையை கழட்டி வில்லனால் துரத்தப்படுவது போன்ற காட்சி ஒன்றில் நடித்தது போன்ற காரணத்தினாலும் முகேஷ் கோபமடைந்துள்ளார். இதனால், அந்த காட்சியில் நடிக்க மறுத்திருக்கிறார் அசின்.
ஆனாலும், மீடியாக்கள் முன்னிலையில் அசினை மோசடிகாரி என்றும், இருவரும் டேட்டிங் செய்ததாகவும் பகிரங்கமாக அறிவித்தார். இதனால், அசின் - நித்தின் முகேஷ் காதல் முறிந்தது. இதனைத் தொடர்ந்து, அசின் 'ஜாபா' திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றார்.
அக்காலகட்டத்தில், தமிழ் சினிமா நடிகர்கள் இலங்கையில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளக் கூடாது என்ற உத்தரவு இருந்தது. இந்த தடையை மீறி அசின் இலங்கையில் படப்பிடிப்பில் கலந்துகொண்டதால், தமிழ் சினிமா வட்டாரம் அவரை தூக்கி வீசியது.
அசினுக்கு கடைசி வரை வாய்ப்பளித்தது பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான். ஆனால், ஒரு பேட்டியில் சல்மான் கான் குறித்து கேள்வி எழுப்பியபோது, அசின், "நானும் அவரும் சாதாரண நண்பர்கள் தான், அவர் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை" என்று கூறியிருந்தார்.
இதனால் சல்மான் கானும் அசினை கைவிட்டார். பின்னர், அசின் கடந்த 2016 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு, புகழின் உச்சத்தில் இருந்த அசினின் திரை வாழ்க்கை, சில சர்ச்சைகள் மற்றும் தவறான முடிவுகளால் வீழ்ச்சியை சந்தித்தது.