இரண்டு முறை கவிழ்ந்த கார்!! மீண்டும் கார் ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித்..
கடந்த சில வாரங்களுக்கு முன் துபாயில் 24 மணி நேரம் நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜித் தனது அணியுடன் இணைந்து பங்கேற்றார். இந்த கார் ரேஸில் 911 GT3 R என்ற பிரிவில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பிடித்து வெற்றிபெற்றனர். மேலும் gt4 பிரிவில் Spirit of the race எனும் விருது வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸிலும் அஜித் கலந்துகொண்டார். இதில் இரண்டு முறை விபத்தில் அஜித் சிக்கியுள்ளார். முதல் முறை நடந்த விபத்தில் இருந்து மீண்டு வந்தாலும், இரண்டாவது முறை மீண்டும் விபத்து ஏற்பட்டு இரண்டு முறை கார் கவிழ்ந்துள்ளது.
முன்னே சென்று கொண்டிருந்த கார் திடீரென நிற்க, அதன்மீது அஜித்தின் கார் மோதியதால், விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், அஜித் தற்போது நன்றாக இருக்கிறார் என அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்திற்கு பின்பும் அவர் கார் ரேஸில் களமிறங்கி, 14வது இடத்தை பிடித்ததாகவும், மக்களிடம் இருந்து அதீத வரவேற்பு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ..