பிரபல சீரியல் நடிகருக்கு ஆண் குழந்தை பிறந்தது.. குடும்பத்துடன் நடிகர் வெளியிட்ட போட்டோ
தமிழ் சினிமாவை தாண்டி தமிழ் சின்னத்திரை பிரபலங்களுக்கு தான் ரசிகர்களிடம் இப்போது அதிக மவுசு உள்ளது.
அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சத்ய ராஜா.
மாடல், பிட்னஸ் ப்ரீக், நடன கலைஞர் என பன்முகம் கொண்ட சத்ய ராஜா இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மௌனம் பேசியதே தொடரில் இப்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவி 3வது முறை கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார், வளைகாப்பும் கோலாகலமாக நடத்தினார்.
இந்த நிலையில் 3வது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் தனது இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார்.