பிசினஸ் ஆகாமல் கிடக்கும் வெளிச்ச நடிகரின் படம்..! எல்லாத்தும் காரணம் இது தானா?

பிசினஸ் ஆகாமல் கிடக்கும் வெளிச்ச நடிகரின் படம்..! எல்லாத்தும் காரணம் இது தானா?

லீடர் நடிகர் ஹெட் நடிகர் என படங்களில் கதை சுமாராக இருந்தாலும் அவர்களுடைய படம் எளிமையாக 200 கோடி வசூலை வாரி குவித்து விட்டு செல்கிறது. மறுபக்கம் அறிமுக நடிகர்கள் நடிக்கும் படங்கள் சில திடீரென 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி அதிர்ச்சியை கொடுக்கிறது. 

மட்டுமில்லாமல் புதுமுக நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்படி தமிழ் சினிமா ஒரு புதிய பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கும் வெளிச்ச நடிகருக்கும் மதுபான நடிகருக்கும் மார்க்கெட் என்பது இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் கோடம்பாக்க கோடாங்கிகள். 

சமீபத்தில் வெளியான மதுபான நடிகரின் வீரமான படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றும் கூட எதிர்பார்த்த வசூலை பெற முடியாமல் தரைதட்டி வென்றது படம் நன்றாக இருந்தால் வசூல் வர வேண்டும் தானே.. ஏன் இந்த நடிகருக்கு இப்படி ஆகிறது..? என்று விசாரித்த போது அவர் படங்களில் என்டர்டைன்மென்ட் என்ற விஷயம் குறைவாக இருக்கிறது. 

படத்தின் வெற்றிக்காக தன்னைத்தானே வருத்திக் கொள்கிறார் அந்த நடிகர் என்பதெல்லாம் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் சுவையாக இருக்குமே தவிர வசூலுக்கு சரியாக வருமா..? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். 

மேலும் அவருடைய முந்தைய படங்களின் அடுத்தடுத்த தோல்வியும் இந்த படத்தின் வசூல் ரீதியான தோல்விக்கு காரணமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் இந்நிலையில் அடுத்த சில நாட்களில் வெளியாகவுள்ள வெளிச்ச நடிகரின் படமும் இதே வகையறாவில் தான் போய் சிக்கும் என்று கூறுகிறார்கள். 

காரணம், வெளிச்ச நடிகரும் தன்னுடைய படங்களில் என்டர்டைன்மென்ட் என்ற ஒரு விஷயத்தை மறந்து போய் விடுகிறார். அவருடைய படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கக் கூடிய என்டர்டைன்மென்ட் மாஸ் மசாலா விஷயங்கள் ஒர்க் அவுட் ஆவது கிடையாது. அவர் அதனை விரும்புவதும் கிடையாது என்று கூறுகிறார்கள். 

சினிமா என்றால் முழுக்க முழுக்க எண்டர்டெயின்மெண்ட் மட்டும் தான். ஆனால், சமீபகாலமாக, சமூகம், சாதி ரீதியில் ஒரு பக்க அரசியல் சார்புடன் படங்கள் வெளியாகி வருகிறது. ஆரம்பத்தில் அப்படியான படங்களை ரசித்தவர்கள் கூட சமீப காலமாக அதனை வெறுக்க தொடங்கி விட்டார்கள்.

போர் அடிக்கிறது, மன உளைச்சலாக இருக்கறது போன்ற காரணங்களுக்காக தியேட்டர் பக்கம் செல்பவர்களுக்கு இந்த மாதிரியான படங்கள் மேலும் மன அழுத்தத்தை அதிகப்படுத்தி அனுப்புகின்றன. இதனை அறிந்த லீடர் நடிகர், ஹெட் நடிகர் ஆகியோர் அது போன்ற கதை அம்சத்துடன் எந்த இயக்குனர் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதே கிடையாது. 

இதை அறியாமல் இருக்கும் வெளிச்ச நடிகர், மதுபான நடிகர் ஆகியோர் தற்காலிக வெற்றிக்காக நிரந்தரமான மார்கெட்டை அடகு வைத்து விட்டார்கள் என்றும், தற்போது அவர் நடித்துள்ள புதிய படம் முழு நீள ஆக்சன் திரைப்படமாக மட்டுமே உருவாகி இருக்கிறது இது குடும்ப ரசிகர்களை எந்த அளவுக்கு தவறும் என்பது சந்தேகம் என்றும் கூறுகிறார். 

ஆனால், படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது என்றும் படத்தை பார்த்த சிலர் கூறுகிறார்கள். படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் அடுத்தடுத்த நாட்களில் வசூல் பிக்கப் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆருடம் கூறுகிறார்கள். 

மறுபக்கம் வெளிச்சம் நடிகர் தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயத்தில் சிக்கிக் கொள்கிறார் சமுதாயத்திற்கு ஆதரவான கருத்தை சொல்கிறேன் என்ற பெயரில் அவர் கூறக்கூடிய கருத்துக்கள் பெருவாரியான மக்களை அவரிடம் இருந்து பிரித்து வைக்கிறது. 

மக்களின் மனநிலை என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல் ஊடகங்களில் வரக்கூடிய விஷயங்களை மட்டுமே நம்பி மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என அவரது நினைத்துக் கொண்டு ஏதாவது கருத்தை சொல்லிவிட்டு போகிறார். 

இது இவருடைய தனிப்பட்ட இமேஜை மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது இதுவும் இவருடைய படங்கள் சமீப காலமாக பிக்கப் ஆகாமல் போவதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

LATEST News

Trending News