வைரலான டிக் டாக் வீடியோ.. விரக்தியின் உச்சத்தில் ஷாலின் சோயா

வைரலான டிக் டாக் வீடியோ.. விரக்தியின் உச்சத்தில் ஷாலின் சோயா

சர்ச்சைக்குரிய யூடியூப்பராக வலம் வரும் டிடிஎப் வாசனின் தோழியான ஷாலின் சோயா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அண்மையில் இவர், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான, எடவேல பாபுவுடன் இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி பெரும் பேசுபொருளானதைத் தொடர்ந்து, தற்போது ஷாலின் சோயா விளக்கம் அளித்துள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது மலையாள சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறது. அறிக்கை வெளியான பின், கேரளா திரைப்பட அகாடமியின் தலைவரான இயக்குநர் ரஞ்சித் மீதும் வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா புகார் அளித்திருந்தார். அதில், சில ஆண்டுகளுக்கு முன் மலையாள படத்தில் நடிக்க வைப்பதாக கூறி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதனால் அன்று இரவே கொல்கத்தா திரும்பியதாகவும் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் கேரளா திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கோழிக்கோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரஞ்சித் மீது பாலியல் ரீதியான புகார் கொடுத்துள்ளார்.

அந்த வகையில், நடிகை ரேவதி சம்பத், நடிகர் சித்திக் மீதும், தமிழ் நடிகர் ரியாஸ் கான் மீதும் பாலியல் புகார் கூறியிருந்தார். அதே போல பழம்பெரும் நடிகர் திலகனின் மகள் பெரிய நடிகர், ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து, நடிகை மினு முனீர், கேரளா நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு, செய்த அநாகரீக செயலைப் பற்றி வெளிப்படையாகவே பேசியிருந்தார். இப்படி பாலியல் பிரச்சனை தலைவிரித்தாடிக்கொண்டு இருக்கும் நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஷாலின் சோயா எடவேல பாபுவுடன் எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி, அவருடன் ஜோயா அட்ஜெஸ்ட்மென்ட் செய்து விட்டதாக செய்திகள் வெளியானது.

இதைப்பார்த்து, டென்ஷனான ஷாலின் சோயா, எதை சொல்வதாக இருந்தாலும் அதில் ஒரு நியாயம் வேணாமா? என்ன நடந்தது தெரியுமா? அந்த வீடியோ பல வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது. இடைவேளையில் டிக் டாக் வீடியோவிற்காக செய்தது. அந்த பிரச்னைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உண்மையில் இங்கு பெயர் தெரியாத கொடுமையான வில்லன்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நான் வெறுக்கிறேன் என கோபத்துடன் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும், ரசிகர் ஒருவர் ஆறுதல் கூறிய கமெண்ட்டில், இந்த கமெண்ட்டுகளை எல்லாம் பார்க்கும் போது எனக்கு தற்கொலை எண்ணம் தான் வருகிறது. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நான் எந்த தவறுமே செய்யவில்லை என்றும் சோயா மனம் வருத்தி பதிவிட்டுள்ளார்.

edavela babu

LATEST News

Trending News

HOT GALLERIES