விலகிய கமல் ஹாசன்!! பிக்பாஸ் 8-ஐ தொகுத்து வழங்கப்போவது இந்த நடிகையா?
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். கடந்த 7 ஆண்டுகளாக 7 சீசனை கடந்து உலக நாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீசன் 8 துவங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் விலகியுள்ளேன் என்றும் இனிமேல் நான் இல்லை என்றும் கமல் ஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டு அதிகாரப்பூர்வ தகவலை கூறியிருக்கிறார். படங்களில் கால்ஷீட் கமிட்மெண்ட்ஸ்-ஆல் வரும் பிக்பாஸ் சீசனில் பங்கேற்க முடியவில்லை என்ற காரணத்தையும் விஜய் டிவிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் குழுவினருக்கும் என் நன்றிகள் என்றும் தெரிவித்திருக்கிறார் கமல் ஹாசன்.
அவருக்கு பதில் இனி யார் தொகுத்து வழங்குவது என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில், கமலுக்கு பதில் யார் தொகுத்து வழங்கப்போவது என்ற தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
விஜய் டிவி நடிகை நயன் தாராவிடம் பிக்பாஸ் 8 சீசனை தொகுத்து வழங்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையான தகவல் இல்லை, யார் தொகுத்து வழங்குவார் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், ஒருசில சிம்பு என்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் சரத்குமார் என்றும் கூறி வருகிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விஜய் டிவியின் பிக்பாஸ் குழுவினர் வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.