இப்போ சிங்கிள் தான், ஆன அதுக்கு ரெடியா இருக்கேன்!! ஸ்ருதி ஹாசன் இப்படி சொல்லிட்டாரே!!

இப்போ சிங்கிள் தான், ஆன அதுக்கு ரெடியா இருக்கேன்!! ஸ்ருதி ஹாசன் இப்படி சொல்லிட்டாரே!!

 நடிகை ஸ்ருதி ஹாசன் பற்றி பெரிய அளவில் அறிமுகம் கொடுக்க தேவையில்லை. ஏன் என்றால் அவர் தனது தந்தையை போல பன்முக திறமைகளை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கமல் எப்படி தனது சொந்த வாழ்க்கையில் பல கிசுகிசுக்களில் சிக்கி இருக்கிறாரோ அதே மாதிரி ஸ்ருதி ஹாசனும் சிக்கி வருகிறார்.

இவர் சாந்தனு ஹசாரிகா என்பவருடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக செலவிடும் தருணங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்து இருந்தனர். ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு பிரேக் அப் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ருதி ஹாசன், ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் Single-ஆ Committed-ஆ என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த ஸ்ருதி ஹாசன், "நான் இப்போது சிங்களாக இருக்கிறேன். வேறு ஒருவருடன் மிங்கிளாக தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.   

LATEST News

Trending News