இரண்டாம் திருமணம் செய்கிறாரா ஜிவி பிரகாஷ்!! பிரபலம் சொன்ன தகவல்..
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி தம்பதிகள் சில நாட்களுக்கு முன்பு, இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்துள்ளனர். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாய் மாறிவிட்டது. இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல வித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சுபைரிடம், ஜிவி பிரகாஷ் இரண்டாம் திருமணம் செய்கிறாரா? இல்லை மீண்டும் சைந்தவியுடன் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த சுபைர்," ஜிவி பிரகாஷ் - சைந்தவிக்கு சின்ன வயது தான். கருத்து வேறுபாடு எல்லாம் நீங்கி மீண்டும் சேர்ந்து வாழ கூட வாய்ப்பு இருக்கிறது. மறுமணம் என்ற விஷயம் ஜிவி கையில் தான் இருக்கிறது. காலம் தான் முடிவு செய்யும். இப்போது இரண்டு பேருமே காயத்தில் இருப்பார்கள், அவர்களுக்கு தேவை கொஞ்சம் மன அமைதி தான் என்று சுபைர் தெரிவித்துள்ளார்.