திருமணமாகியும் தெலுங்கு சினிமாவில் அந்த மாதிரி பிரச்சனைகளை சந்திக்கிறேன்!! காஜல் அகர்வால் வேதனை..

திருமணமாகியும் தெலுங்கு சினிமாவில் அந்த மாதிரி பிரச்சனைகளை சந்திக்கிறேன்!! காஜல் அகர்வால் வேதனை..

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2020 -ம் ஆண்டு காஜல் அகர்வால் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட காஜல் அகர்வாலிடம், திருமணம் வாழ்க்கை பின் சினிமா வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த காஜல் அகரால், திருமணம் முடிந்த உடன் ஹீரோயின்களுக்கு சினிமா வாழ்க்கை முடிந்துவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு திருமணம் முடிந்த பிறகு பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது.

என்னுடைய வாழ்க்கையில் சினிமாவிற்கு முன்பு பின்பு எந்த வித்தியாசமும் தெரியவில்லை ஹிந்தி சினிமாவில் ஹீரோயின்கள் திருமணத்திற்கு பின்பு அவர்களுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது. அந்நாள் தெலுங்கு சினிமாவில் அப்படி இல்லை, திருமணமான நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க தயங்குகிறார்கள். தெலுங்கிலும் விரைவில் மாற்றம் வரும் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.   

LATEST News

Trending News

HOT GALLERIES