விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இதன்பின் சில படங்கள் மட்டுமே நடித்த வனிதா சினிமாவில் நடிப்பதில் இருந்து தள்ளியே இருந்தார்.
ஆனால் பிக் பாஸ் சீசன் 3 மூலம் திரையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது படங்கள் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வரும் நடிகை வனிதா, சமீபத்தில் 2K அழகானது காதல் எனும் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக விளங்கி வந்த டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிக்கவிருக்கும் 'அந்தகன்' படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம் வனிதா.
இதனை வனிதாவின் பதிவு, உறுதிசெய்துள்ளது. இதோ பாருங்க..