அன்புடன் குஷி சீரியலில் இருந்து வெளியேறிய நடிகைக்கு பதிலாக நடிக்கவரும் சூப்பர்ஹிட் சீரியலின் ஹீரோயின் - யார் தெரியுமா
பிரஜன் நடிப்பில் சின்னத்தம்பி சீரியலுக்கு பின் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் அனுப்புடன் குஷி.
இதில் பிராஜனுக்கு ஜோடியாக, கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் இளம் நடிகை ரேஷ்மா.
ஆனால் தீடீரென அன்புடன் குஷி சீரியலில் இருந்து நடிகை ரேஷ்மா அதிரடியாக வெளியேறியுள்ளார்.
இதனால் இவர் நடித்து வந்த குஷி கதாபாத்திரத்தில் இனி எந்த நடிகை நடிக்கப்போகிறார் என கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ரேஷ்மா நடித்து வந்த குஷி கதாபாத்திரத்தில் நடிகை மௌனிகா தேவி நடிக்கவிருக்கிறாராம்.
இவர் இதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட்டான அவளும் நானும் சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.