சீரியல் நடிகருடன் ரகசிய காதல்!! ஜோடியாக நிகழ்ச்சிக்கு சென்ற பிக்பாஸ் நடிகை அர்ச்சனா..

சீரியல் நடிகருடன் ரகசிய காதல்!! ஜோடியாக நிகழ்ச்சிக்கு சென்ற பிக்பாஸ் நடிகை அர்ச்சனா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அருண் பிரசாத். மேலும் இவர் 2017 -ம் ஆண்டு வெளிவந்த மேயதா மான் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அருண் பிரசாத் தனது காதலி உடன் போட்டிங் செல்லும் புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அருண் பிரசாத், பிரபல சீரியல் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான VJ அர்ச்சனா உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அதனால் அருண் பிரசாத் உடன் இருப்பது VJ அர்ச்சனா தான் என நெட்டிசன்கள் கூறிவந்தனர். தற்போது முதன்முறையாக தன் காதலர் அருண் பிரசாத்துடன் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு ஜோடியாக சென்றிருக்கிறார் நடிகை அர்ச்சனா. அவர்கள் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சிலருடன் நான் பழகுவது சாதாரணமான ஒன்று தான் சிறந்த கலைஞர்களுடன் நான் நேரத்தை செலவிடுகிறேன். சக நடிகராக அவரிடன் சிலவற்றை கற்றுக்கொள்கிறேன், ஆனால் இது மக்களின் கனவுகளாக தான் இருக்கும்.

இதுகுறித்து அருணிடம் விவாதம் செய்யமாட்டேன். எனக்கு தெரியாமல் எப்படி இது? என்று ஷாக்காகி தான் கேட்கிறேன் என்று அர்ச்சனை காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES