பெற்ற மகனை கூட நம்பாத விஜய்!! தளபதியே இப்படி சொல்லிட்டாரே..
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி வந்த நிலையில் லைக்கா நிறுவனம் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் பணிகள் சில காரணத்தால் தாமதம் ஆகிவருகிறது.
இந்நிலையில் விஜய் கொடுத்த பழைய பேட்டி ஒன்றில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரசிகர்கள் விஜய்யிடம், நீங்கள் பட வெளியாவதற்கு முன்பு என்ன செய்துகொண்டு இருப்பிங்க ? என்றார். அதற்கு அவர், ஒரே டென்ஷனாக இருக்கும்.. இருக்கிற கடவுளையெல்லாம் வேண்டிக் கொண்டிருப்பேன் என்று பதில் அளித்துள்ளார்.
மேலும் உங்கள் மகன் சினிமாவில் வேறு யாருடைய ரசிகர்? என்று மற்றோரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அன்றைய தேதிக்கு என்ன படம், பாட்டு ஹிட்டோ அதற்கேற்ற மாதிரி ஜேசன் சஞ்சய் மாறிவிடுவார். ஒரு நாள் எனக்கு சூர்யா ரசிகர் என்று சொல்லுவான், இன்னொரு நாள் ஆர்யா ரசிகன்னு சொல்லுவான். அவரை நம்ப முடியாது என்று விஜய் கூறியுள்ளார்.