நான் அதுக்காக ரொம்பவே ஏங்குவேன்.. ஃபுல் டைம் எனக்கு வேண்டும்!! 19 வயது அனிகா..
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், விஸ்வாசம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா.
14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, தற்போது 19 வயதில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு, படுக்கையறை மற்றும் முத்தக்காட்சியில் நடித்து மிரட்டி இருப்பார். தற்போது நடிகர் தனுஷ் இயக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார் அனிகா. நயன்தாரா லுக்கில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
தற்போது, கார்த்திக் இயக்கத்தில், ஹிப் ஆப் ஆதி நடித்து இசையமைத்த PT Sir படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்துள்ள நிலையில், அனிகா பிரமோஷனுக்காக பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், அக்கரையோடு பாசமாக பல கேள்விகளை கேட்பவர்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி எழுப்பட்டது.
தன் மீது அக்கரையோடு சாப்பிட்டியா? என்ன பண்ற என்று கேட்பவர்களுக்காக ஏங்குபவள். எனக்கு அது தேவை என்று இருப்பவள், ஃபுல் டைம் எனக்கு அது வேண்டும், ஆனால் என்னோடு லிமிட் கொஞ்சம் அதிகம் தான். அதுக்கும் மேல் சென்றால் போதும் விட்டுவிடுங்க என்று சொல்லிவிடுவேன் என்று கூறியிருக்கிறார் நடிகை அனிகா.