ஆமா, நான் அந்த மாதிரி பையன் தான்!! சுச்சி வீடியோவுக்கு பதிலடி கொடுத்து முன்னாள் கணவர் கார்த்திக்..
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக திகழ்ந்து பிரபலமானவர் சுசித்ரா. அப்படி பல படங்களில் நடித்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்த சுசித்ரா, நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்த சம்பவத்திற்கு பின் கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்து ஆள் அடையாளமே தெரியாமல் காணாமல் போனார்.
சமீபத்தில் பாடகி சுசித்ரா அளித்த பேட்டியொன்றில் ஒன்றில் முன்னாள் கணவர் கார்த்திக் ஹோமோ செக்ஸுவல் என்று அடையாளப்படுத்தி பேசியிருக்கிறார். கல்யாணம் முடிந்த இரு ஆண்டுகளில் தனக்கு அது தெரிய வந்ததாகவும் அவருக்கு குழந்தை பிறக்காது என்றும் அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்றும் மருத்துவர் என்னிடம் சான்று அளித்துவிட்டார். இதனால் அவரிடம் இருந்து நான் விவாகரத்து கேட்டு வந்தேன்.
இந்த புகைப்படங்களை கூட என் டிவிட்டர் கணக்கை வைத்து என் கணவரும் தனுஷும் தான் வெளியிட்டனர் என்று சுசித்ரா தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்தி ஒரு வீடியோவில் ஓரினச்சேர்க்கையாளர் பற்றி பேசியிருக்கிறார்.
அந்த வீடியோவில், நான் ஹோமோ செக்ஷுவலாக இருந்தால் அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வேன் என்றும் அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை, பெருமையாக தான் நினைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். என் ஊரில் நடக்கும் பிரைட்வாக்கில் கலந்து கொள்பவன் நான் எனவும் பதிலடி கொடுத்துள்ளார் கார்த்திக். குறித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.