அக்கா என்ன கல்யாணம் பண்ணிக்கிறீயான்னு ஒருத்தன் கேட்டான்!! அதிர்ச்சியான நடிகை தன்யா..
தமிழ் சினிமாவில் நடிகர் சசிகுமார் நடிப்பில் 2016ல் வெளியான பலே வெள்ளையத் தேவா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இப்படத்தின தொடர்ந்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், ட்ரிக்கர், அஜிலன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வந்த தன்யா, இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கிய பேப்பர் ராக்கெட் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, அர்ஜுன் தாஸ் நடிப்பில் ரசவாதி என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகும் இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் தன்யா, சில விசயங்களை பகிர்ந்திருக்கிறார்.
வித்தியாசமான முறையில் ஒருவர் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தன்யா, ஒருத்தன் அக்கா என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?. அது எனக்கு புரியவில்லை, சம்மந்தமே இல்லாமல் ரெண்டும் இடிக்கிறதே என்று யோசித்தேன் என்று தன்யா கூறியிருக்கிறார்.