கோடிகளில் சம்பளம் கேட்டு தயாரிப்பாளருக்கு டார்ச்சர் செய்கிறேனா!! நடிகர் கவின் கொடுத்த விளக்கம்..

கோடிகளில் சம்பளம் கேட்டு தயாரிப்பாளருக்கு டார்ச்சர் செய்கிறேனா!! நடிகர் கவின் கொடுத்த விளக்கம்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த கவீன் சமீபத்தில் லிஃப்ட், டாடா போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்தார். அதனை தொடர்ந்து இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்த வாரம் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் கவின் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது அதிக கோடிகளில் சம்பளம் கேட்பதாகவும், சிறு தயாரிப்பாளர்கள் உங்களிடம் பேச சிரமப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்விக்கேட்டிருந்தார். அதற்கு கவின், நாம் நடித்திருக்கும் ஒரு படம், கண்டிப்பாக விவாதிக்கப்படும் என்று நினைக்கிறேன். அதேநேரத்தில் சம்பளம் விவாதிக்கப்படுமா என்று எனக்கு தெரியாது.

எனக்கும் தயாரிப்பாளருக்கும் தான் விவாதமாக இருக்கும். நான் கேட்கிறேன் என்பதற்காக அதையே கொடுக்கமாட்டார்கள். நீங்கள் எந்த பத்திரிக்கையாளர்கள் என்று எனக்கு தெரியாது. இதற்கு முன்னாடி வேலை செய்யும் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு வேலைக்கு செல்லும் போது அதே சம்பளத்தை கேட்கமாட்டோம். அதிகமாக தான் கேட்போம், அதையும் தீர்மானிப்பது முன்னாடி வாங்கிய சம்பளம் தான் தீர்மானிக்கும்.

கனா காலும் காலங்கள் சீரியலில் நடிக்கும் போது என் சம்பளம் 1000 ரூபாய், அதன்பின் 5 ஆண்டுகளுக்கு பின் என் சம்பளம் 6000 ரூபாய். சம்பளம் என்பது நம் படம் எவ்வளவு மார்க்கெட் பெறுகிறது என்பதை தான் தீர்மானிக்கிறதே தவிர தனிப்பட்ட முறையில் யாரும் தீர்மானிப்பது இல்லை. இதுதான் என்னோட 4வது படம், இதை முடிக்கவே ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த காரணங்களுக்காக நான் சில படங்களுக்கு நோ சொல்லி இருக்கிறேன்.

ஆனால் நோ சொல்வதற்கு முக்கிய காரணமே, யாரையும் காத்திருக்க வைக்க வேண்டாம் என்று நினைத்து எவ்வளவோ பேர் இருக்கிறார்கள், அவர்களை வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இதெல்லாம் தான் காரணம், சுவாரஸ்யத்திற்காக பேசுறதுக்காக நன்றாக இருக்கலாம், இதுதான் உண்மை என்று கவின் கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES