திருமணமாகி சில நாட்களிலேயே விவாகரத்தா.. எமோஷனலாக பேசிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!!

திருமணமாகி சில நாட்களிலேயே விவாகரத்தா.. எமோஷனலாக பேசிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!!

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர் விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் விருமன் படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவருடைய திருமணம்  மதுரையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.  சென்னையில் திரை பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்காக பெரிய அளவில் ரிசப்ஷன் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திரஜா சங்கர், தனக்கு வரும் தவறான கமெண்ட் பற்றி பேசியுள்ளார்.  

அதில் அவர், எப்படி இந்த மாதிரி மனசாட்சி இல்லாமல் கமெண்ட் பன்றாங்கனு தெரியவில்லை. அவுங்க பேர நான் மறந்துட்டேன். அவுங்க, "இன்னும் எத்தனை நாள் இந்த ஜோடி ஆட போகுதுனு பாக்கலாம் கொஞ்சம் மாசத்துல தனி தனியா பேட்டி கொடுப்பாங்க. விவாகரத்து நடக்கும்" என்று கமெண்ட் செய்து இருந்தார்.

எங்க மாமா மூன்று முடிச்சி strong -ஆ போட்டு இருக்காரு. இப்படி சொல்லு உஙக்ளுக்கு எப்படி மனசு வந்து இருக்கும். 3 மாதம் அப்பறம் சொன்ன கூட பரவலா நான் கோபப்பட்டு இருக்கமாட்டேன். ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது எப்படி இந்த மாதிரி கமெண்ட் அடிக்கிறாங்கனு தெரியவில்லை என்று ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா கூறியுள்ளார்.    

LATEST News

Trending News

HOT GALLERIES