காதலருடன் பிரேக்கப்!! அப்பா கமல் ஹாசனையே மிஞ்சிய அவரது மகள் ஸ்ருதி ஹாசன்

காதலருடன் பிரேக்கப்!! அப்பா கமல் ஹாசனையே மிஞ்சிய அவரது மகள் ஸ்ருதி ஹாசன்

உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக உன்னை போல் ஒருவன் படத்தில் வானம் எல்லை என்ற பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இப்பாடலை தொடர்ந்து 7 ஆம் அறிவு மற்றும் 3 போன்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். இப்படத்தினை தொடர்ந்து, அஜித், விஜய், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார்.

இதன்பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஸ்ருதி, சாந்தனு என்பவரை காதலித்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். நடிப்பை தாண்டி இசையில் அதிக கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி, தந்தை கமல் வரிசைகளில் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் பாடி, நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜுடன் ரொமான்ஸ் செய்துள்ள இனிமேல் ஆல்பம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகை ஸ்ருதி ஹாசன் சாந்தனு என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து இணைந்து எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தன் காதலர் சாந்தனுவின் புகைப்படங்களை டெலீட் செய்திருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளார்கள். இதனால் தன் நீண்டநாள் காதலரை பிரேக்கப் செய்து காதல் உறவை முறித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமான விளக்கத்தை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை பலரும், காதல் விசயத்தில் கமல் ஹாசனையே அப்படியே மிஞ்சிவிடுவார்களோ என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES