சமந்தாவின் முன்னாள் கணவருடன் டேட்டிங்கில் அந்த நடிகையா!! வைரலாகும் புகைப்படங்கள்..

சமந்தாவின் முன்னாள் கணவருடன் டேட்டிங்கில் அந்த நடிகையா!! வைரலாகும் புகைப்படங்கள்..

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை சமந்தாவுடன் ஜோடியாக நடித்து பிரபலமான நாக சைதன்யா, தொடர்ந்து சில படங்களில் அவருடன் நடித்தார். இருவரும் ஒரு கட்டத்தில் காதலில் விழ 2017ல் சமந்தாவை கரம்பிடித்தார் நாக சைதன்யா. இருவரும் ஒன்றாக வாழ்ந்த 4 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

இதற்கான காரணங்கள் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகிய நிலையில் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர். சமீபகாலமாக நடிகை சமந்தா, நெருக்கமாக இருக்கும் நடிகர்களுடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் நாக சைதன்யா நடிகைகளுடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் செய்திகள் கசிந்தது.

அந்தவகையில் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சோபிதாவுடன் 3 ஆண்டுகளுக்கு முன் காதல் கிசுகிசுவில் சிக்கினார் நாக சைதனயா. இருவரும் டேட்டிங் சென்றுள்ளதாகவும் இணைந்து எடுத்த புகைப்படங்களும் கசிந்தது.

இந்நிலையில், மகாராஷ்டாராவில் ஒரு இடத்திற்கு நடிகை சோபிதாவும் நாக சைதன்யாவும் ஒன்றாக சுற்றுல சென்றுள்ளதாக கூறி ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

ஏற்கனவே, விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இருவரும் ஒரே இடத்திற்கு சென்றுள்ளார்கள் என்று புகைப்படங்களை டிரெண்ட் செய்வதை போன்று தற்போது நாக சைதன்யா - சோபிதாவின் புகைப்படங்களை வைரலாகி டேட்டிங் சென்றுள்ளார்கள் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES