விஜய் சார் என்னை அப்படிதான் பார்த்தாரு!! பல ஆண்டு உண்மையை கூறிய கில்லி பட நான்சி ஜெனிபர்..

விஜய் சார் என்னை அப்படிதான் பார்த்தாரு!! பல ஆண்டு உண்மையை கூறிய கில்லி பட நான்சி ஜெனிபர்..

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளியான படம் கில்லி. நடிகை திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களில் நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் சில தினங்களுக்கு முன் கில்லி பட ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பல கோடி வசூலையும் அள்ளியது. இந்நிலையில் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக புவனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை நான்சி ஜெனிபர் சமீபத்தில் பேட்டியளித்து பல விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

எனக்கு தனிப்பட்ட விசயமாக கில்லி படத்தில் பிடித்தது என்றால், எனக்கு விஜய் சாருக்குமான நிஜமான தொடர்பு தான். என்னை தங்கச்சியாகவே விஜய் சார் பார்த்தாரு, அந்த இடத்தில் வாடா போடான்னு சொல்ல எனக்கு பயமாக இருந்தது.

அதற்கு விஜய் சார், அதெல்லாம் பயப்படக்கூடாது, படத்துல நான் அண்ணன், நீ வாடா போடான்னு கூப்பிடு என்று கூறினார். ஏற்கனவே நேருக்கு நேர் படத்தில் என் சித்தப்பாவாக நடித்தார். அப்போது அவரை அங்கிள் என்று தான் கூப்பிடுவேன், அந்த மரியாதை தான் இருந்தது, கில்லியில் வாடா போடான்னு கூப்பிட்ட கஷ்டமாக இருந்துச்சி, என்னை அப்படி நடிக்க வைத்தது அவர் தான் என்று நான்சி கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES