கமல் மகள் ஸ்ருதி ஹாசனால், மனைவியுடன் லோகேஷுக்கு பிரச்சனையா! பகிர் கிளப்பிய தகவல்
லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கமல் ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து ஒரே ஒரு பாடலுக்கு நடந்திருந்தார். இந்த பாடல் காட்சியில் ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கமாக நடித்திருந்த லோகேஷ் கனகராஜை பார்த்து ரசிகர்கள் பலரும், லோக்கி நா நீயா இப்படி என கூறி வந்தனர்.
சமீபத்தில் இந்த பாடலுக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தது லோகேஷிடம், உங்களுடைய மனைவி இந்த பாடலை பார்த்துவிட்டு என்ன கூறினார் என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு ”என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்விகளை நாம் ஆரம்பத்தில் இருந்தே தவிர்த்து வருகிறேன். எனக்கு உங்களுக்குமான தொடர்பு மட்டும் போதும் என நினைக்கிறன். இதனால் பர்சனல் விஷயங்களை பேச எனக்கு விருப்பம் இல்லை. என் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பற்றி பொது இடத்தில பேசக்கூடாது என்பதால் இந்த கேள்வியை தவிர்க்கிறேன்” என கூறினார்.
இந்த நிலையில், ஸ்ருதி ஹாசனுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்ததால் லோகேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுகின்றனர். இதனால் லோகேஷ் மன உளைச்சலில் இருக்கிறார் என கூறப்படுகிறது. இப்படியொரு தகவலை உலா வந்தாலும், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.