சித்தார்த்துடன் இரண்டாம் திருமணம்! நடிகை அதிதி ராவ்வின் முன்னாள் கணவர் இந்த நடிகர் தான்
நடிகை அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும் காதலித்து வந்ததை நாம் அறிவோம். தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என சமீபத்தில் இருவரும் அறிவித்தனர்.
நடிகர் சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதை நாம் அறிவோம். ஆனால், அதிதி ராவ்வும் விவாகரத்து ஆனவர் என்பது பலருக்கும் தெரிந்து இருக்காது.
ஆம், கடந்த 2009ஆம் ஆண்டு சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் அதிதி ராவ். பின் இருவரும் 2013ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
தற்போது அதிதி ராவ்வின் முன்னாள் கணவர் சத்யதீப் மிஸ்ராமசபா குப்தா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.