“அதுக்கு மட்டும் ஐட்டம் வேணும்.. ஆனா..” வெளிப்படையாக பேசிய நடிகை அனுயா பகவத்..
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பிறமொழிகளிலும் இந்த விஷயம் டிரண்டிங் ஆகி விட்டது.
அதாவது பெரிய ஹீரோக்கள் நடிக்கும் ஒரு படத்தில் ஒரு பிரபல நாயகி ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவது. இதுதான் இப்போது டிரண்டிங் ஆக போய்க் கொண்டு இருக்கிறது.
புஷ்பா படத்தில், சமந்தா குத்தாட்டம் போட்டார். ஜெயிலர் படத்தில் தமன்னா காவாலா பாடினர். பத்துதல படத்தில் ஆர்யா மனைவி சாயிஷா ஆடினார். இனி வரப்போகும் பல படங்களில் இப்படி குத்தாட்டம் போட, பிரபல நடிகைகளை தேர்வு செய்து ஆட வைக்கின்றனர்.
இப்படி ஒரே ஒரு பாடலுக்கு ஆட அந்த நடிகைகளுக்கு தரப்படும் சம்பளம், லட்சங்களில் அல்ல. கோடிகளில். அதனால் ஒரே பாட்டுக்கு நடனமாடி கோடிகளில் சம்பாதிக்க நடிகைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் இது ஏதோ புதிய விஷயமாக பலரும் நினைக்கின்றனர். ஆனால் இது 40, 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் இருந்து வருவதுதான். எம்ஜிஆர், சிவாஜி படங்களிலேயே, ரஜினி, கமல் நடித்த ஆரம்ப கால படங்களிலேயே இப்படி பிரபல கவர்ச்சி நாயகிகள் வந்து டான்ஸ் ஆடியிருக்கின்றனர்.
1990களிலும் இந்த ஒரு பாட்டுக்கு நடிகைகள் நடனம் என்பது இருந்திருக்கிறது. உதாரணமாக காதலன் படத்தில் கவுதமி, சிக்குபுக்கு சிக்கு புக்கு ரயிலு பாடலுக்கு ஆடியிருப்பார்.
சிவகாசி படத்தில், கோடம்பாக்கம் ஏரியா பாடலுக்கு நயன்தாராவும், இந்து படத்தில் மெட்ரோ சானல் பாடலுக்கு குஷ்புவும், சிவகார்த்திகேயன் நடித்த மெரினா படத்தில், தனுஷ் – நயன்தாராவும் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பர்.
ஷாஜகான் படத்தில் சரக்கு வெச்சிருக்கேன், இறக்கி வெச்சிருக்கேன் பாடலுக்கு விஜயுடன் மீனா ஆடியிருப்பார். பிதாமகன் படத்தில், சிறப்பு பாடல் காட்சியின் சிம்ரன், சூர்யாவுடன் ஆடியிருப்பார். குத்துவிளக்கு, குத்துவிளக்கு என நடிகை கஸ்தூரியும் ஆடியிருக்கிறார்.
இப்படி பல படங்களில் நடிகைகள் சிறப்பு கெஸ்ட் ரோலில் பாடல்களுக்கு நடனமாடுவது வழக்கமாக நடந்து வருகிறது.
ஆனால் இப்படி குத்தாட்டம் போடும் நடிகைகள், அந்த பாடல் காட்சியில் முன்னழகு, பின்னழகு, இடுப்பு, வயிறு, தொடைகள், கால்கள், தோள்பட்டைகள் என உடலில் கவர்ச்சியான பாகங்கள் அனைத்தும் பளிச்சிடும் படியான ஜிகினா உடையில் வந்து குத்தாட்டம் போடுகின்றனர். அதனால், இது ஐட்டம் சாங் என்றே அழைக்கப்படுகிறது.
இந்த விஷயம் குறித்து பலரும் பல கருத்துகளை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நகரம், நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்த அனுயா பகவத் தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை அனுயா பகவத் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, சினிமாவில் ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடினால் அனைவரும் குறிப்பிட்டு நடிகையை ஐட்டம் நடிகை என்று அடையாளப்படுத்துகிறார்கள். சினிமா பார்க்கும்போது, அவர்களுக்கு ஐட்டம் பாடல் வேண்டும்.. ஐட்டம் டான்ஸ் பார்க்க வேண்டும்.
ஆனால் யாரும் அப்படியான பெண்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல விரும்ப மாட்டார்கள். இதுதான் நடிகைகளின் நிலைமை என்று, வெளிப்படையாக அவருடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார்.
டான்ஸ், பாட்டுக்கு மட்டும் ஐட்டம் வேணும். ஆனால் பாட்டுக்கு ஆடற அந்த நடிகைகளுக்கு மட்டும் மரியாதை தர மாட்டார்கள், என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை அனுயா பகவத்.