என்னோட முதல் முத்தம்.. அதுவும் அந்த நேரத்தில்.. கூச்சமின்றி கூறிய ரித்விகா..!
சென்னை வாசியான நடிகை ரித்விகா தமிழ் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து அசத்தியவர். இவர் கார்த்திக் சிவக்குமார் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.
சேலத்தில் பிறந்த இவர், இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அடி எடுத்து வைத்தார். இதனை அடுத்து விக்ரம் இயக்கிய காதல் படமான நினைத்தது யாரோ படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த இரண்டு படங்களிலும் கிடைத்த வரவேற்பை விட பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் வடசென்னை பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவர் பிலிம் பேர் விருதினை பெற்றிருக்கிறார். அதுவும் துணை நடிகைக்கான சிறந்த நடிகை என்ற விருது கிடைத்துள்ளது.
இவர் நடிப்பில் வெளி வந்த ஒரு நாள் கூத்து, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, கபாலி, இருமுகன் போன்ற படங்கள் இவரது நடிப்பை படம் பிடித்து காட்டியது. திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு இருக்கிறார்.
இதனை அடுத்து பல படங்களில் நடித்து வந்து கொண்டிருக்கும் ரித்திகா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு அவர்கள் கேட்ட பலவிதமான கேள்விகளுக்கு சிரித்த படி பதில் அளித்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.
அந்த வகையில் இவரிடம் முதன் முதலாக நீங்கள் நடித்த முத்த காட்சி எது? ரொமான்ஸ் காட்சி எது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு அவர் என்ன பதில் அளித்தார் என்று தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள்.
இதற்கு அவர் தந்த பதிலில் மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியை அதிகாலை 3:00 மணி 4:00 மணிக்கு படம் ஆக்கினார்கள். அதற்காக நிறைய லைட்டுகளை போட்டு பகல் போல அந்த படத்தில் காட்டி இருப்பார்கள்.
உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன். அது தான் என்னுடைய முதல் முத்த காட்சி. அந்த நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தோம். எங்கள் தூக்கத்தை கலைத்து தட்டி எழுப்பித்தான் அந்த காட்சியை எடுத்தார்கள். இதை அடுத்து அந்த காட்சி ரெடியாகிவிட்டது.
நான் குளிக்காமல் முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு வந்து தான் அந்த காட்சியில் நடித்திருந்தேன் என்றால் எப்படி என் மனநிலை இருந்திருக்கும் என்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள் என்று அழகாக பதில் அளித்து இருக்கிறார் ரித்விகா.
இதனை அடுத்து இவரது முதல் மொபைல் பற்றி கேள்வி எழுப்பிய போது காலேஜ் இறுதி ஆண்டு சென்ற சமயத்தில் தான் மொபைல் போனை வாங்கினார் என்றும் அதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்ததோடு இப்போது மொபைல் தேவையா? என்று எனது பெற்றோர்கள் கேட்டார்கள் என்பதையும் வெளிப்படையாக தெரிவித்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.
இதனை அடுத்து ரசிகர்கள் அந்த நேரத்தில் தன்னை எழுப்பி முத்தம் கொடுத்த போது மனநிலை ரித்விகாவிற்கு எப்படி இருக்கும் என்று ஓபனாக தெரிவித்த செய்தியை வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள்.