அதிக உணவுகள் ஆர்டர் செய்து நடிகர் சூர்யா சாப்பிடுவது ஏன்?- ஜோதிகா சொன்ன சுவாரஸ்ய தகவல்
நடிகை ஜோதிகா திருமணம், குழந்தைகள் என ஆன பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி கலக்கி வருவது நமக்கு தெரியும்.
இந்த இரண்டாது இன்னிங்ஸில் ஏதோ படங்கள் நடித்தோம் என்றில்லாமல் சில முக்கிய கருத்துக்களை கூறும் விதமாக படங்கள் றடிக்கிறார். அண்மையில் இவர் மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ள காதல், தி கோர் என்ற படம் வெளியாகி இருந்தது.
ஜியோ பேபி இயக்கிய இப்படம் நல்ல பாராட்டுக்களை பெற்று வருகிறது, படக்குழுவும் பட வெற்றி மகிழ்ச்சியில் உள்ளனர்.
இப்பட புரொமோஷன் போது இயக்குனர் ஜியோ பேபி ஒரு பேட்டியில் சூர்யா குறித்து கூறினார். இப்பட கதை கூற சென்னையில் ஜோதிகா வீட்டிற்கு சென்றபோது, சூர்யா அவரது கையாலேயே அனைவருக்கும் தேநீர் வழங்கி உபசரித்தார்.
அதுமட்டுமல்ல ஒரு மொபைல் ஆப் மூலமாக மிக அதிக அளவில் விதவிதமான உணவுகளை வரவழைத்து தங்களுக்கு விருந்தோம்பல் செய்தார் என்றார். சூர்யாவின் அந்த விருந்தோம்பல் குறித்து படப்பிடிப்பில் ஒரு நாள் இயக்குனர் மற்றும் ஜோதிகா பேசினார்கள்.
அப்போது ஜோதிகா கூறும்போது, சூர்யா எப்போதுமே இதுபோன்று விருந்தினர்கள் வரும்போது தனக்கும் பிடித்தமான உணவுகளை சேர்த்து அதிக அளவில் ஆர்டர் செய்து விடுவார்.
அப்படி விருந்தினர் வரும்போது மட்டும் தான் தன்னால் விதவிதமான சாப்பிட முடியும் என்பதால் தான் அவர் அதிக அளவிற்கு உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவார் என கூறியுள்ளார்.