வெறித்தனமான வொர்க்-அவுட்டால் வேற லெவலுக்கு மாறிய விஜய் டிவி ஜாக்குலின்: வைரல் வீடியோ

வெறித்தனமான வொர்க்-அவுட்டால் வேற லெவலுக்கு மாறிய விஜய் டிவி ஜாக்குலின்: வைரல் வீடியோ

விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு’ உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஜாக்குலின் தற்போது விஜய் டிவியில் பெரிய அளவில் தலை காட்டவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது இன்ஸ்டாகிராமில் பதிவாகும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள வீடியோ வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஜாக்லின் எப்போதும் குண்டாக இருப்பார் என்று அவரது ரசிகர்கள் ஒரு குறையாக சொல்லி வந்த நிலையில் உடம்பை குறைப்பதற்கு அவர் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் காட்சி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ளன.

இதனை அடுத்து தற்போது அவர் ஓரளவு ஸ்லிம் ஆகி உள்ளார் என்பதும் இதே போன்று அவர் இன்னும் சில மாதங்களுக்கு ஒர்க்கவுட் செய்தால் அவரது உடல் எடை வெகுவாக குறைந்துவிடும் என்ற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

HOT GALLERIES