எதிரியை தோற்கடிக்க உன் அழகு ஒன்றே போதும்: தர்ஷா குப்தாவின் பதிவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

எதிரியை தோற்கடிக்க உன் அழகு ஒன்றே போதும்: தர்ஷா குப்தாவின் பதிவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.  

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக ’ருத்ரதாண்டவம்’ ’ஓ மை கோஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ’மெடிக்கல் மிராக்கிள்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ’முள்ளும் மலரும்’ ’மின்னலே’ ’செந்தூரப்பூவே’ உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் குக் வித் கோமாளி, சிங்கிள் பொண்ணுங்க, ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ உள்ளிட்ட தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தாவுக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களுக்கு ஏராளமான கமெண்ட், லைக் குவியும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ’எதிரியே ஆனாலும் துரோகத்தால் தோற்கடிக்காதே’ என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ‘ எதிரியை தோற்கடிக்க துரோகம் தேவைப்படாது, உன் அழகு ஒன்றே போதும் என் கண்மணியே’ என்பது உட்பட பல கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES