நயன்தாராவின் காதலை பற்றி கொச்சையாக அசிங்கப்படுத்திய இயக்குநர்! வைரல் புகைப்படம்..
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக களம் கண்டு வருபவர் நடிகை நயன் தாரா. நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நயன் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருவது ஒன்றுதான்.
அந்தவகையில், இலங்கை தமிழர் விடுதலைக்காக போராடிய மாவீரன் பிரபாகரனின் இளமைப்பருவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டிய படம் மேதகு. சமீபத்தில் இப்படம் வெளியாகி இணையத்தை அதிர வைக்கும் அதே தருணத்தில் கிட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட சமூக வலைதளபதிவுகளை தோண்டி எடுத்து சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளார்.
அரசியல் தலைவர்களை பற்றி கிட்டு பதிவிட்ட பதிவுகள் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது நயன்தாராவை பற்றிய பதிவு “மாவீரனின் படத்தை எடுத்த இயக்குனரின் பெண்கள் மீதான பார்வை இதுதான்” என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து இயக்குனர் கிட்டு ஒரு வீடியோ வெளியுட்டுள்ளார்.
நான் வழக்கமாக சில வருடங்களுக்கு முன்பு இட்ட பதிவுகளை மேதகு திரைப்படத்தின் வெற்றியை சரிப்பதற்காக எப்போதோ எதற்காகவோ பதிவிட்ட பதிவுகளை தேடி எடுத்து சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரும் அந்த மீம்ஸ் குறிப்பிட்டுள்ளது உண்மைதானே அவர் வருடத்திற்கு ஒருவரை காதலித்து தானே வருகிறார் என்று படுமோசமாக அசிங்கப்படுத்தி விமர்சித்துள்ளார் கிட்டு. இதுபற்றி தான் கூறியதற்கு மன்னிப்பு கேட்டும் வீடியோவை வெளியிட்டும் உள்ளார் இயக்குநர் கிட்டு.