Adjustmentக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்- ரம்யா நம்பீசன் கொடுத்த ஐடியா.
மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் படங்கள் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ரம்யா நம்பீசன்.
2000ம் ஆண்டு மலையாளத்தில் Sayahnam என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பின் தொடர்ந்து அந்த மொழியிலேயே படங்கள் நடித்து வந்தார்.
பின் தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் நடிக்க வந்த இவர் குள்ளநரி கூட்டம், பீட்சா என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். இப்போது அவர் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
நடிகை என்பதை தாண்டி ரம்யா நம்பீசன் பாடகியாகவும் கலக்கி வருகிறார்.
சினிமா உலகத்தில் Adjustment என்பது நிறைய இருக்கிறது, நடிகைகள் பலரும் கூறியுள்ளார்.
இதுகுறித்து ரம்யா நம்பீசன் கூறுகையில், Adjustment தொல்லை இருந்து கொண்டு தான் இருக்கிறது, அப்படி நடக்கும் போது அதை தைரியமாக நடிகைகள் எதிர்கொண்டு பொதுவெளியில் அதைப் பற்றி பேச வேண்டும்.
அதுமட்டுமின்றி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பவர்களிடம் எதைப்பற்றியும் யோசிக்காமல் வலுவான மனநிலையில் இருந்து கொண்டு ’முடியாது’ என்று மறுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.