திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசிய ரம்யா பாண்டியன்!

திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசிய ரம்யா பாண்டியன்!

இணையதளங்கள் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த நடிகை ரம்யா பாண்டியன் முதல் முதலாக திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் 

பிக்பாஸ் சீசன் 4, குக் வித் கோமாளி சீசன் 1 ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். ‘ஜோக்கர்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்பதும் குறிப்பாக சமீபத்தில் நடந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார் என்பதும் அதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடிய ரம்யா பாண்டியன் திருமணம் குறித்த கேள்விக்கு, ‘இன்று வரை நான் இன்னும் எனக்கானவரை கண்டு பிடிக்கவில்லை என்றும் அப்படியே கண்டுபிடித்தாலும் அவருக்கு என்னை பிடிக்க வேண்டும் என்றும் அதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை ராஜா’ என்றும் பதிலளித்துள்ளார்.

இன்னொரு ரசிகர் ’எனது மகனுக்கு உங்களைப் போன்ற பெண்ணை தான் தேடிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் என்ன படித்து உள்ளீர்கள்’ என்று கேட்டதற்கு ’இந்த விஷயம் உங்கள் மகனுக்கு தெரியுமா’ என்று காமெடியாக பதிலளித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES