நான் வந்துட்டேன், எதோ செய்யணும்னு சொன்னியாமே'.. செய்.. துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' டிரைலர்..!

நான் வந்துட்டேன், எதோ செய்யணும்னு சொன்னியாமே'.. செய்.. துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' டிரைலர்..!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ‘கிங் ஆஃப் கோதா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இம்மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதுவரை சாஃப்ட்டான கேரக்டரில், ரொமான்ஸ் கேரக்டரில் பார்த்து ரசித்த துல்கர் சல்மானை இந்த படத்தில் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் ஹீரோவாக பார்ப்பது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ’என்னை ஏதோ செய்யனும்னு சொன்னியாமே, இதோ வந்திருக்கேன், செய்’ என்று ஆரம்ப காட்சியிலேயே அதிரடியாக துல்கர் சல்மான் வசனம் பேசுவது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

முழுக்க முழுக்க அதிரடி காட்சிகள். ரவுடி வன்முறை காட்சிகள் கொண்ட இந்த படத்தின் டிரைலரில் ஐஸ்வர்யா லட்சுமியின் ரொமான்ஸ் காட்சிகள் ரிலாக்சாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த டான்சிங் ரோஸ் சபீர், ’விக்ரம்’ திரைப்படத்தில் நடித்த செம்பன் வினோத், பிரசன்னா, அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்

ஜேக்ஸ் பிஜாய் இசையில், நிமேஷ் ரவி ஒளிப்பதிவில் சசிதரன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தை அபிலாஷ் ஜோஸ்லி இயக்கியுள்ளார். இந்த படம் கண்டிப்பாக துல்கர் சல்மானின் மற்றொரு வெற்றி படமாக தான் அமையும் என்பது இந்த ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES