ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது.. வீச்சு தான்.. 'ஜெயிலர்' மாஸ் டிரைலர்..!

ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது.. வீச்சு தான்.. 'ஜெயிலர்' மாஸ் டிரைலர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலில் அப்பாவியாக எந்த வம்புக்கும் போகாத ஒரு கேரக்டரிலும், அதன் பின் திடீரென புலி போல் பாய்வதுமான கேரக்டரில் நடித்துள்ளார். ’ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது, வீச்சு தான் என்ற மாஸ் வசனமும் ’கொஞ்சம் இதோட முடிச்சுக்கலாம் இல்ல’ என ரம்யா கிருஷ்ணன் கேட்கும்போது அவருக்கே உரித்தான சிரிப்பை அடுத்து ’ரொம்ப தூரம் போயிட்டேன், ஃபுல்லா முடிச்சிட்டு தான் வருவேன்’ என்று கூறும் வசனமும் திரையரங்களில் ரசிகர்களுக்கு விருந்தான காட்சிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் ஒரு அதிரடி ஆக்சன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து நெல்சன் கொடுத்துள்ளார் என்பதும் அவருக்கே உரிய காமெடியை ஆங்காங்கே வைத்துள்ளார் என்பதும் இந்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் ட்ரைலரிலிருந்து தெரிகிறது. விநாயகனின் ஆக்ரோஷமான வில்லத்தன நடிப்பு அவரை வேற லெவலுக்கு கொண்டு செல்லும்.

அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசை, கார்த்திக் அண்ணனின் கேமரா, நிர்மல் படத்தொகுப்பு ஆகியவை இந்த படத்துக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நிமிடத்திற்கு மேல் உள்ள ட்ரெய்லரில் சிவராஜ் குமார், மோகன்லால், தமன்னா காட்சிகள் இல்லை என்றாலும் இடம்பெற்றுள்ள ரஜினியின் மாஸ் காட்சிகள் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES