101 கிலோவில் இருந்து 71 கிலோ வரை... உடல் எடையைக் குறைக்க சிம்புவின் சிம்பிளான டிப்ஸ்...
உடல் எடை என்பது அனைவருக்குமே பெரிய தலைவலிதான். உடல் எடை அதிகமானால் பலருக்கும் பல வியாதிகள் ஏற்பட்டு விடும்.அதற்காக பலரும் பல பாடுகளை பட்டு உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறுவார்கள்.
அப்படி கொரோனா காலத்திற்கு முன்பு பல காரணங்களுக்காக நடிகர் சிம்புவின் உடல் எடையை அதிகரித்து இருந்தார். அவர் 101 கிலோவிருந்து 71 கிலோ வரைக்கும் உடல் எடையைக் குறைத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
அவர் உடல் எடையைக் குறைத்தது எப்படி என்று தெரிந்துக் கொண்டால் நீங்களும் உடல் எடையைக் குறைக்கலாம்.
சிம்பு தனது உடல் எடையைக் குறைப்பதற்காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி செய்ய ஆரம்பிப்பாராம்.
நடைபயிற்சி முடிந்தவுடன் உடலில் இருக்கும் தசைகள் எல்லாவற்றும் ஊக்கம் கொடுக்கும் வகையில் உடற்பயிற்சி செய்வாராம். வாரத்தில் இரண்டு நாட்களைத் தவிர ஐந்து நாட்களும் உடற்பயிற்சி செய்வாராம்.
எடை அதிகரிக்க முக்கிய காரணங்களில் ஒன்று தான் துரித உணவுகளும் நான்வெஜ் சாப்பாடுகளும் தான். அதனால் எடையைக் குறைப்பதற்காக வெஜிட்டேரியனாக மாறியிருக்கிறார்.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை தவிர உடலுக்கு ஊக்கம் கொடுக்கும் விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வந்தாராம். அதாவது கிரிக்கெட், பாட்மிட்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை விளையாட்டு உடலுக்கு அதிக உழைப்பைக் கொடுப்பாராம்.
இவர் எடையைக் குறைப்பதற்காக சிம்பு வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டாராம். மரக்கறிகளும், பழக்களும், கீரை வகைகளும் அதிகம் எடுத்துக் கொண்டாராம்.