சந்தேகத்தால ஒருத்தன் வாழ்க்கையை அழிச்சிட்டா, திரும்ப அடிப்பான்னு பயம் வரணும்: 'எஃப்.ஐ.ஆர்' டிரைலர்
சந்தேகத்தால் ஒருத்தனை தீவிரவாதி என்று முடிவு பண்ணி அவனோட வாழ்க்கையை அழித்தால் அவர்களில் எவனாவது ஒருவன் திரும்ப அடிப்பான் என்ற பயம் வரணும் என்ற வசனத்துடன் வெளியாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் டிரெய்லர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
ஒரு அப்பாவியை தீவிரவாதி என குற்றம் சாட்டி விட்டால் அந்த அப்பாவி வெகுண்டெழும்போது எந்த அளவுக்கு விபரீதம் ஏற்படும் என்பதுதான் இந்த படத்தின் கதை என இந்த ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது
அப்பாவியாகவும், தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டவருமான கேரக்டரில் விஷ்ணு விஷால் நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். மனுஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார்.
பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்திற்கு டிரைலருக்கு பின்னர் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது