ரஜினிக்கு வில்லனாக விஜய் பட வில்லனா? தலைவர் 170 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

ரஜினிக்கு வில்லனாக விஜய் பட வில்லனா? தலைவர் 170 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பின் TJ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், இதற்கு நடிகர் விக்ரமிற்கு ரூ. 50 கோடி சம்பளம் தவறும் தயாரிப்பு நிறுவனம் தயாராக இருப்பதாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில், விக்ரம் இப்படத்தில் வில்லனாக நடிக்க வில்லை என்றால், அர்ஜுன் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை அர்ஜுனிடம் நடந்து வருகிறதாம்.

விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. அர்ஜுன் தற்போது விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES