ஜிம்மிலும் குறையாத அழகு.. ஷாலு ஷம்முவின் ஒர்க் அவுட்.. உச்சுகொட்டும் ஃபேன்ஸ்!

ஜிம்மிலும் குறையாத அழகு.. ஷாலு ஷம்முவின் ஒர்க் அவுட்.. உச்சுகொட்டும் ஃபேன்ஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தாலும், சமூக வலைத்தளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு. எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள், டான்ஸ் வீடியோக்கள், ரீல்ஸ் மற்றும் ஜிம் ஒர்க் அவுட் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சிவகார்த்திகேயன், சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். அதன்பின் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நடிகர் சதீஷ் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டுக்குத்து, திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களிலும் சிறிய ஆனால் கவனிக்கப்படும் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

Shalu shammu instagram

நடிகை ஷாலு ஷம்மு: பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், இன்ஸ்டாகிராம், பேஸ் புக், ட்விட்டர் போன்ற இணைய உலகில் ஷாலு ஷம்முவின் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக அவர் பகிரும் கிளாமரான புகைப்படங்களுக்கும், ஸ்டைலான வீடியோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. நடிகை ஷலு ஷம்மு சில நாட்களுக்கு முன்பு புடவையில் மணப்பெண் போல அலங்கரித்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி,செம அழகு என்றும், மணப்பெண் லுக் சூப்பர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

குறையாத அழகு: இந்நிலையில் தற்போது ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். உடற்பயிற்சியில் முழு கவனம் செலுத்தும் ஷாலு ஷம்மு, ஃபிட்னஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். அந்த வகையில், ஸ்டைலான ஜிம் உடையில் கேபிள் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஜிம்மிலும் கிளாமர் குறையல என்றும் ஷாலு நீங்க மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
 

LATEST News

Trending News

HOT GALLERIES