மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் பல புதிய முகங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி.

99 படங்கள் வரை தனது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இவரது சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் விஜய்யின் நிறைய வெற்றிகரமான படங்களை தயாரித்திருக்கிறார். 100வது படத்தை நடிகர் விஜய் வைத்து தயாரிக்க வேண்டும் என ஆசைப்பட்டார், ஆனால் அது நடக்கவில்லை.

இவர் சமீபத்தில் ராஜஸ்தான் சென்று அங்கு காரில் பயணிக்கும் போது பயங்கரமான விபத்தில் சிக்கியுள்ளார். அதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

விஜய்

விபத்தில் சிக்கியவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர், ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று (மே 5) உயிரிழந்துள்ளார்.

ராஜஸ்தானில் உயிரிழந்த சௌத்ரியின் உடல் இன்று (மே 6) சென்னை கொண்டு வரப்பட்டது. தற்போது ஆர்.பி.சௌத்ரியின் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அரசியல் வேலைகளில் செம பிஸியாக இருக்கும் விஜய் மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES