நைட் பார்ட்டியில் இளம் நடிகர்களுக்கு ரூட் விட்ட நடிகை.. டாப் நடிகையை வெளுத்து வாங்கிய பாடகி!

நைட் பார்ட்டியில் இளம் நடிகர்களுக்கு ரூட் விட்ட நடிகை.. டாப் நடிகையை வெளுத்து வாங்கிய பாடகி!

சென்னை: சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு க்யூட் நடிகையை பற்றிய சர்ச்சை தகவலை பிரபல பாடகி ஒருவர் வீடியோவில் பகிர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழட்டி விட்டார்: அந்த நடிகை சினிமாவில் ஆரம்ப காலத்தில் பெரிய வாய்ப்புகளுக்காக போராடிக் கொண்டிருந்தபோது, கட்டுமஸ்தான ஹீரோ ஒருவருடன் இணைந்து நடித்தாராம். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் ஜோடியாக நடித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த ஹீரோவின் ஆதரவால் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, பின்னர் டாப் நடிகையாக உயர்ந்த அந்த நடிகை வளர்ச்சி அடைந்த பிறகு, அந்த ஹீரோவையே நடிகை கழற்றி விட்டுவிட்டாராம். இதுகுறித்து அந்த ஹீரோ பலமுறை வருத்தப்பட்டு தன்னிடம் புலம்பியதாக அந்த பாடகி தெரிவித்துள்ளார்.

நைட் பார்ட்டி: அதுமட்டுமல்லாமல், அந்த நடிகைக்கு நைட் பார்ட்டிகளில் கலந்து கொள்வது மிகவும் பிடிக்குமாம். வெளிப்படையாக அது நண்பர்கள் சந்திப்பு போல இருந்தாலும், அங்கு வரும் இளம் நடிகர்களுடன் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ளவே அந்த நடிகை அதிகமாக பார்ட்டிக்கு செல்வாராம். ஒருமுறை பிரம்மாண்ட இயக்குநரின் படத்தில் நடித்த இளம் நடிகர் ஒருவரை நைட் பார்ட்டியில் பார்த்த அந்த நடிகை, அவருடன் நெருக்கமாக பேச முயன்றாராம். ஆனால், இளம் நடிகரோ ஆங்கிலத்தில் தப்புத் தப்பாக பேச, கடுப்பான நடிகை இவர் செட்டாக மாட்டார் என நினைத்து அங்கிருந்தே விலகி சென்றதாகவும் அந்த பாடகி கூறியுள்ளார்.

தற்போது அந்த நடிகையின் பெயர் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், உங்க எல்லா வேலைகளும் எங்களுக்கு தெரியும்... இனிமேலாவது கொஞ்சம் அடங்கி இருங்க என அந்த பாடகி வீடியோவில் எச்சரிக்கை விடுத்திருப்பது போல பேசி இருப்பது கோலிவுட்டில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES