கடற்கரை ஓரத்தில் 19 மாடி புதிய ஹோட்டல்… பாலிவுட் பிரபலத்தில் வேறலெவல் திட்டம்!

கடற்கரை ஓரத்தில் 19 மாடி புதிய ஹோட்டல்… பாலிவுட் பிரபலத்தில் வேறலெவல் திட்டம்!

மும்பை கடற்கரைக்கு அருகில் வசித்துவரும் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் அதே பகுதியில் குடியிருப்பு பகுதி ஒன்றை விலைக்கு வாங்கியிருப்பதாகவும் தற்போது அதில் 19 மாடி ஹோட்டல் ஒன்றை அமைக்கும் பணியை துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் சல்மான் கான் தற்போது ‘டைகர் 3‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அவர் கடற்கரைக்கு அருகில் 19 மாடியில் தங்கும் அறையுடன் கூடிய ஹோட்டல் ஒன்றை அமைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மும்பை பாந்த்ரா கடற்கரை பகுதியில் வசித்து வரும் நடிகர் சல்மான் கான் அருகில் இருக்கும் கார்டர்ரோடு கடற்கரைக்கு அருகில் பழைய குடியிருப்பு பகுதி ஒன்றை விலைக்கு வாங்கியதாகவும் அந்தப் பகுதியில் உணவகம் ஒன்றை அமைப்பதற்கு கடந்த வருடம் மும்பை மாநகராட்சிக்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது உணவகம் அமைப்பதற்கான ஒப்புதல் கிடைத்து விட்டதாகக் கூறப்படும் நிலையில் நடிகர் சல்மான் கான் 19 மாடியில் பெரிய ஹோட்டல் கட்டும் திட்டத்தில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த ஹோட்டலில் அடித்தளத்தில் 3 தளங்கள் அமைக்கப்பட இருப்பதாகக் கூறப்படும் நிலையில் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் ரெஸ்டாரண்ட் மற்றும் காபி நிலையங்கள் அமைய இருக்கின்றன. 3 ஆவது தளத்தில் நீச்சல் குளம் மற்றும் ஜிம் அமையப் போவதாகக் கூறப்படுகிறது. அடுத்து 7-19 தளம் வரை தங்கும் அறைகள் அமையவிருக்கின்றன என்று தகவல்கள் கூறப்படுகிறது.

எற்கனவே மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள பன்வெல் எனும் இடத்தில் பல ஏக்கர் பரபரப்பளவில் நடிகர் சல்மான்கானுக்கு பண்ணை வீடு இருப்பதும் அவ்வபோது அந்த பண்ணை வீட்டில் தன்னுடைய நேரத்தை அவர் செலவிட்டு வருவதும் ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான். இந்நிலையில் 19 மாடியில் புதிய ஹொட்டல் அமைக்கும் திட்டத்தை நடிகர் சல்மான் துவங்கியிருப்பதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES