அஜித் குமார் 52.. துணிவுடன் விடாமுயற்சியை என்றும் கைவிடாத ஹீரோ...

அஜித் குமார் 52.. துணிவுடன் விடாமுயற்சியை என்றும் கைவிடாத ஹீரோ...

மே 1 உழைப்பாளர்கள் தினம் என்பதை தமிழர்கள் அனைவரும் அறிவோம். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அது AK அஜித் குமாரின் பிறந்தநாள் என்று தான் முதலில் நினைவுக்கு வரும்.

உழைப்பால் உயர்ந்த தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவர் அஜித்.  இவர் திரையுலகில் சேர்ந்த சாதனைகள் பல, நிஜ வாழ்க்கையிலும் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளையும் செய்து வருகிறார்.

பிறந்தநாள் பரிசாக அஜித் அடுத்ததாக நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்தின் தலைப்பு போஸ்டர் வெளிவந்தது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 52 வயதை கடந்துள்ள அஜித் இதுவரை திரையுலகில் மற்ற நடிகர்கள் கூட செய்ய பயப்படும் விஷயங்கள் செய்து காட்டியுள்ளார்.

AK 62: அஜித்தின் 62 வது படம் 'விடாமுயற்சி' இயக்குநர் யார் தெரியுமா?, actor  ajithkumar birthday special his 62th movie title revealed vidamuyarchi  directed by magizh thirumeni

அப்படி அவர் செய்த அதிரடி விஷயங்களில் ஒன்று தான் ரசிகர் மன்றத்தை கலைத்தது. யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் இனி எனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என கூறினார். ரசிகர் மன்றம் இல்லை என்றால் என்ன கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்று வரை அவருடன் இருக்கிறார்கள்.

அவருடைய தோல்வியில் அவர் கைகொடுத்து தூக்கிவிட்டுள்ளார்கள். வெற்றியில் தலைமேல் வைத்து கொண்டாடியுள்ளார்கள். இப்படிப்பட்ட விஸ்வாசமான ரசிகர்கள் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என அஜித் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் நடிகர்களை போல் ஸ்டண்ட் செய்யமுடியாது என சொன்ன பலரையும் வாயை மூட வைத்தவர் அஜித். பில்லா 2, ஆரம்பம், வலிமை, மங்காத்தா, வீரம் விவேகம் என பல படங்களில் தன்னுடைய ஸ்டண்ட் மூலம் மிரட்டியுள்ளார்.

குறிப்பாக பைக் காட்சிகள் என்றால் சொல்லவே தேவையில்லை அந்த ஹாலிவுட் நடிகர்களையே மிஞ்சும் அளவிற்கு மிரட்டலான சாகசங்களை பைக்கில் செய்வார்.

தன்னுடைய உடலில் பல பிரச்சனைகள் இருந்தாலும் கூட தனக்காக இருக்கும் ரசிகனை மகிழ வைக்க வேண்டும் என்று ஒவ்வொரு படத்திற்கு மெனக்கெட்டு அஜித் செய்யும் விஷயங்கள் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.

உடல் எடை கூடிவிட்டார், என்ன முகம் இது, இப்படி குண்டாகிவிட்டாரே, அவ்வளவு தான் இனி அஜித் கேரியர் முடிந்துவிட்டது, இனி அவரால் நடிக்க முடியுமா என பல விமர்சனங்கள் அஜித் மேல் உள்ளது.

நடிகர் அஜித் இதுவரை 15 அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதில் 14 முதுகெலும்பு அறுவை சிகிச்சை ஆகும். இதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் என இத்தனை தடைகள் தன்னுடைய உடலில் இருந்தாலும் கூட உலகளவில் பைக் ரைட் சென்று வருகிறார். இதுவே அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடியாகும்.

அஜித் எப்படி இருந்தாலும் கூட அவரை கொண்டாட பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இப்படி தன்னுடைய ரசிகர்களுக்காக மட்டுமே திரையில் தோன்றும் அஜித் அவர்களுக்கு 52 பிறந்தநாள் வாழ்த்துக்களை சினிஉலகம் தெரிவித்து கொள்கிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES