நடிகை சமந்தாவிற்கு என்ன ஆச்சு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

நடிகை சமந்தாவிற்கு என்ன ஆச்சு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை சமந்தாவிற்கு தேடி தரவில்லை.

இதனால் சமந்தாவின் மார்க்கெட் குறைய துவங்கிவிட்டது என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா சூப்பர்ஹிட் படத்துடன் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைதளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது செயற்கை சுவாச கருவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்துவிட்டனர். சமந்தாவிற்கு என்ன ஆனது என கேட்க துவங்கிவிட்டனர்.

இந்நிலையில், தன்னுடைய ஆரோகியத்தை மேன்படுத்த தான் செயற்கை சுவாச கருவி மூலம் நடிகை சமந்தா சிகிச்சை பெற்று வருகிறாராம். அதுமட்டுமின்றி மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். 

LATEST News

Trending News