அரைநிர்வாண கோலத்தில் 'செவ்வாய்கிழமை' நடிகை.. வைரலாகும் போஸ்டர்..!
செவ்வாய்கிழமை’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் போஸ்டர் வெளியாகி இருப்பதை அடுத்து இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பயல் ராஜ்புத். இவர் வினய் நடித்த ’இருவர் உள்ளம்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது ’கோல்மால்’ ’ஏஞ்சல்’ ஆகிய தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை பயல் ராஜ்புத் முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘செவ்வாய்கிழமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் நடிகை பயல் ராஜ்புத் அரை நிர்வாண கோலத்தில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அஜய் பூபதி என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் என்பவர் இசையமைத்து வருகிறார் இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.