'பேயை முதல்ல பார்த்த சாட்சி நீங்க தான்.. மாஸ்டர் மகேந்திரனின் 'ரிப்பப்பரி' டிரைலர்..!
குழந்தை நட்சத்திர முதல் திரைப்படங்களில் நடித்து வரும் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள ‘ரிப்பப்பரி’ என்ற திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
திகில் மற்றும் சஸ்பென்ஸ் கொண்ட இந்த படத்தில் ஜாதி மாறி திருமணம் செய்த ஜோடிகள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள், அவர்களுடைய பிணம் கூட போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த கொலைகளை செய்பவர் யார்? பேயா அல்லது பேய் வடிவில் இருக்கும் மனிதரா? என்பதை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை என்பது ‘ரிப்பப்பரி’ டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
மாஸ்டர் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஜேம்ஸ், மாரி, ஸ்ரீனி, காவ்யா அறிவுமணி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அருண் கார்த்திக் என்பவர் இயக்கி உள்ளார். ரத்தினம் ஒளிப்பதிவில் முகன் வேல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு திவாகரா தியாகராஜன் இசையமைத்துள்ளார். இந்த படம் மாஸ்டர் மகேந்திரனுக்கு திரை உலக வாழ்வில் திருப்பத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.