புலியே இரண்டடி பின்னால வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்.. 'புஷ்பா 2' டிரைலர்..
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவான ’புஷ்பா’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.350 கோடிக்கு அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சுகுமார் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஷ்பாவை காணவில்லை என பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தேடி வரும் நிலையில் புஷ்பா வெளிநாட்டுக்கு தப்பி இருக்கலாம் என்றும் புஷ்பாவை காவல்துறையினர் கொலை செய்துவிட்டு நாடகமாடலாம் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் புலிக்காக வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் புஷ்பா இருப்பதை பார்த்த பொதுமக்கள் புஷ்பா உயிருடன் தான் இருக்கிறார் என்று ஆனந்த கூத்தாடும் காட்சிகளுடன் இந்த டிரைலர் முடிவுக்கு வருகிறது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் டிரைலர் வெளியானதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.