'கனவுல அவன் வந்து எது சொன்னாலும் அப்படியே நடக்குது': விமலின் 'தெய்வ மச்சான்' டிரைலர்..!

'கனவுல அவன் வந்து எது சொன்னாலும் அப்படியே நடக்குது': விமலின் 'தெய்வ மச்சான்' டிரைலர்..!

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான விமல் நடித்த ’தெய்வமச்சான்’ என்ற திரைப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

விமல் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், பாலசரவணன், அனிதா சம்பத் உள்பட பலர் நடித்துள்ளனர். மார்ட்டின் நிர்மல் குமார் என்பவரின் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் டிரைலர் முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்டதாக இருப்பதால் காமெடி பிரியர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமல் தனது தங்கையை திருமணம் செய்ய நடத்தும் கூத்துகள் தான் இந்த படத்தின் கதை என்பது தெரிய வருகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இதே நாளில் விமல் நடித்த மற்றொரு திரைப்படமான ’குலசாமி’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES