நயன்தாராவின் 75 வது படத்தில் இணைந்த 'ராஜா ராணி' நடிகர்.. பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி..!

நயன்தாராவின் 75 வது படத்தில் இணைந்த 'ராஜா ராணி' நடிகர்.. பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் 75 ஆவது படம் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இந்த படத்தில் நயன்தாராவின் ’ராஜா ராணி’ படத்தில் நடித்த நடிகர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் நீல் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. டிரைடன்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது நடிகர் ஜெய் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நயன்தாராவின் ’ராஜா ராணி’ திரைப்படத்தில் இணைந்து நடித்த ஜெய் தற்போது மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடிகர் ஜெய் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் இன்ப அதிர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக கருதப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES